5தாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சி பெரும் அணி வீரர்கள்

0
33

நடப்பு சாம்பியனான மும்பை அணி ஐ.பி.எல் கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது.இதற்காக அணி வீரர்கள் அனைவரும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபாய் , அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன . இந்நிலையில் ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் போட்டிக்காக துபாய் , அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஐ.பி.எல் 2020 தொடரின் முதல் போட்டியில் நடப்ப சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி சி.எஸ்.கே அணியை எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த வாரம் செப்டம்பர் 19 அன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் வெல்ல போவது சிஎஸ்கே அணியா அல்லது மும்பை இந்தியன்ஸ் அணியா என்பதை காண உங்களை போல நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.