ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகும் துரோகி விஜய் சேதுபதி என்கிற ஹேஷ்டேக் ..!

0
22

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவே கூடாது. அந்த படத்தில் இருந்து அவர் விலக வேண்டும் என்று இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், கவிஞர் தாமரை, வைரமுத்து உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800ல் இருந்து விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். முன்னதாக #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.

இந்நிலையில் #TamilsTraitorVijaysethupathi(தமிழர்களின் துரோகி விஜய் சேதுபதி) என்கிற ஹேஷ்டேக் இன்று ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்பவர்கள் கூறியிருப்பதாவது,இலங்கை கொடியை சட்டையில் குத்திய முதல் தமிழ் நடிகர் என்ற கேவலத்தை செய்துள்ளார் விஜய் சேதுபதி. நாம் இவ்வளவு சொல்லியும் கேட்காமல் இருக்கிறார் விஜய் சேதுபதி. அவரின் படங்களை புறக்கணிக்க வேண்டும்.

இலங்கையில் ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் கொடூரமாக கொலை செய்ததை பார்த்த பிறகும் முத்தையா முரளிதரனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால் விஜய் சேதுபதியும் துரோகி தான்.

800 படம் எப்படி ரிலீஸாகிறது என்று பார்த்துவிடுவோம். இனி விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்று அழைப்பதற்கு பதில் தமிழர்களின் துரோகி என்றே அழைக்க வேண்டும்.விஜய் சேதுபதி மட்டும் 800 படத்தில் இருந்து விலகாவிட்டால் அவர் நடித்த மாஸ்டர் உள்ளிட்ட படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.