ஊரடங்கால் தமிழக மக்களுக்கு வெளியான அடுத்த ஷாக்..!அதிரடி அறிவிப்பு

0
197

தமிழ்நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு நான்கரை மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பொது முடக்கத்தால் நசுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தளர்வுகள் அதிலிருந்து மீண்டு வர பயனளிக்கும் எனக் கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும், இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள நிலையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் ரத்து அறிவிப்பை நீட்டித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு படி,வண்டி எண் 02636/02635 ,வண்டி எண் 02680/02679 இந்த ரயில் சேவை அனைத்தும் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் பெற்றவர்களுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி அனுப்பப்படும். கவுண்டர்களில் டிக்கெட் பெற்றவர்கள் பயண தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் கட்டணத் தொகையை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.