தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா:ட்விட்டரில் தெறிக்க விட்ட ஹேஸ்டேக் சண்டை…

0
131

ட்விட்டரில் வழக்கமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ஹேஸ்டேக் சண்டை வருவது வழக்கம் தான்.ஆனால் இந்த முறை சற்று மாறுதலாக விஜய், அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்துக்கொண்டு தெலுங்கு சினிமா ஹீரோக்களை பயங்கரமாக கலாய்த்து #UnrivalledTamilActors என ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கு தெலுங்கு சினிமா ரசிகர்களும் போட்டிப்போட்டு கொண்டு தமிழ் சினிமா ஹீரோக்களை கலாய்த்து #TeluguRealHeroes என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இவர்களின் ட்விட்டர் சண்டை பார்த்த நடிகர் சித்தார்த் இதற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்’தென்னிந்திய ரசிகர்களின் இந்த #Paithyam போட்டியால் இணையம் எவ்வளவு வீணாகிவிட்டது.நம் நாட்டு இளைஞர்கள் அவர்களின் வாழ்க்கையிலும், மொபைலின் இணையம் வழியாகவும் நிறைய செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்