நடிகை தமன்னாவுக்கு அவரது தோழி கொடுத்துள்ள விலையுயர்ந்த பரிசு! என்ன பரிசுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவிங்க!

0
80

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பெட்ரோமாக்ஸ் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி நடித்து வெளியாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் தமன்னா நடித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராம் சரணின் மனைவி உபஸனாவும், தமன்னாவும் தோழிகள்.

இந்நிலையில், உபசனா தமன்னாவுக்கு விலையுயர்ந்த மிகப்பெரிய கிரிஸ்டல் மோதிரம் ஒன்றை பரிசளித்து, இம்மோதிரம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்படும் பரிசு என்று தெரிவித்துள்ளார்.