சூரரைப் போற்று படத்தில் சூர்யா பாடிய பாடல்…சூர்யாவின் புகைப்படத்தை பதிவிட்ட ஜி.வி.பிரகாஷ்…!

0
88

காப்பான் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள படமென்றால் அது சூரரைப் போற்று படம் தான் . இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் படக்குழு தற்பொழுது தீவிரம் காட்டி வருகின்றனர்.அண்மையில் ,படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரேவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் டீசருக்காக ஸ்பெஷல் தீம் மியூசிக் ஒன்றை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாறா தீம் மியூசிக்குக்கான ரேப் பாடலை நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியிருப்பதாகவும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இத்தகவலை இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் #MaaraTheme என்ற hastag முதலிடம் பிடிக்கச் செய்துள்ளனர் சூர்யாவின் ரசிகர்கள்.