மெகா ஹிட் இயக்குனர் உடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா.!!

0
475

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து முடித்துள்ள உள்ளார், இவர் அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார் .

ஆர்யா, சாயிஷா மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துவருகின்றனர். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சூர்யாவுடன் மீண்டும் இணைந்துள்ளார். இவர்கள் இணையும் அனைத்துப்படங்களும் பாடல்கள் மெகா ஹிட் ஆகியுள்ளது .

தற்போது சூர்யா ‘ காப்பான்’ படத்தை தொடர்ந்து இறுதிச் சுற்று இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் சண்டிகர் மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் படம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை 2டி புரொடக்‌ஷனில் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.