”மாநாடு” படத்தில் டபுள் ரோலில் நடிக்கும் சிம்பு..?தயாரிப்பாளர் தெரிவித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

0
65

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.மேலும் இந்த படத்தின் தெறிக்கவிடும் போஸ்டர் கூட சமீபத்தில் வைரலானது.

வெளியான முதல் போஸ்டரில் தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில் இஸ்லாமிய இளைஞர் கேரக்டரில் நடித்துள்ள சிம்பு தொழுகை நடத்துவது போன்றும், அவரது நெற்றிக்கு நேராக இருந்த புல்லட், மூன்றாவது கண் போல் இருந்தது என்பதையும் பார்த்தோம். இதனை அடுத்த சில மணி நேரங்களில் வெளிவந்த மற்றொரு போஸ்டரில் ஸ்டைலாக துப்பாக்கியை கையில் வைத்திருப்பது போன்ற போஸ் இருந்தது.

இந்த இரண்டு போஸ்டர்களிலும் இருந்த சிம்புவின் கெட்டப்பை வைத்து சிம்பு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.இந்த நிலையில் இது குறித்து ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கமளித்துள்ளார். ’மாநாடு’ படத்தில் சிம்பு ஒரே வேடத்தில்தான் நடித்து வருகிறார் என்றும் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ’மங்காத்தா’ படத்தை அடுத்து மாபெரும் வெற்றிப்படமாக வெங்கட்பிரபுவுக்கு ’மாநாடு’ படம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ,எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.