சுரேஷ் சக்ரவர்த்தியை கார்னர் செய்த மற்ற போட்டியாளர்கள்…வெளியான நியூ ப்ரோமோ

0
33

பிக் பாஸ் நான்காவது சீசன் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் நடந்த ‘கடந்து வந்த பாதை’ டாஸ்கின் முடிவில் மொத்தம் எட்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் என தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களில் சுரேஷ் சக்ரவர்த்தி தவிர மற்ற ஏழு பேரும் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டனர். அந்த 8 போட்டியாளர்கள் இன்று நடந்த டாஸ்கில் விவாதித்து எலிமினேஷனில் இருந்து தப்பிக்க பாஸ் பெற ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை பெறும் போட்டியாளர் இனி வரும் வாரங்களில் கூட வெளியேற்றப்பட முடியாது. பிக் பாஸ் வரலாற்றில் இது முதல் முறை என்று இது பற்றி இன்று காலை வெளிவந்த ப்ரோமோ வீடியோவில் கூறி இருந்தனர்.

இந்த எட்டு போட்டியாளர்களில் இருந்து ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற்றி இறுதியில் ஒரு போட்டியாளர் மட்டுமே அந்த பாஸ் பெற முடியும். அந்த டாஸ்கில் பேசும் போது சுரேஷ் சக்ரவர்த்தி தன்னை மற்றவர்கள் குழுவாக சேர்ந்து கார்னர் செய்வதாக கூறிவிட்டு கோபமாக வெளியே வந்திருக்கிறார். இது பற்றி அதன் பின்னர் ரியோ அவரிடம் கோபமாக பேசுவது தற்போது வெளிவந்த புதிய ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டிருக்கிறது. நேற்று ரியோ மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் சுரேஷ் சக்ரவர்த்தியை குறிவைத்து சில கேள்விகள் கேட்டு இருக்கிறார்.

“பிக் பாஸ் வீட்டில் குரூப்பிசம் இருக்கிறது என சொல்கிறீர்கள். அதை எப்போது கண்டுபிடித்தீர்கள்” என அவர் கேட்கிறார். அது கேம்,, அப்போதே முடிந்துவிட்டது என சுரேஷ் சொல்ல, அதற்கு சனம் ஷெட்டி ‘இனிமேல் தான் கேம் ஆரம்பம்’ என சுரேஷ் சக்ரவர்த்திக்கு சவால் விடுகிறார்.

மற்றவர்கள் இடையில் பேசியதால் சுரேஷ் சக்ரவர்த்தி அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார். இதனால் கோபமான ரியோ ‘இடையில் பேசாதீர்கள், அவர் தப்பித்து விடுகிறார்’ என சோபாவை கோபத்தில் அடித்திருக்கிறார்.