சினிமாக்கரனின் சினிமா!! அதகளம் செய்யும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் திரை விமர்சனம்!!

0
357
நடிகர்விஜய் சேதுபதி
நடிகைசமந்தா
இயக்குனர்தியாகராஜன் குமாரராஜா
இசையுவன் ஷங்கர் ராஜா
ஓளிப்பதிவுநிரவ் ஷா, பி.எஸ்.வினோத்

ஆரண்ய காண்டம் படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து பெரும் காத்திருப்பிற்குப் பிறகு மீண்டும் ஒரு காவியத்தை உருவாக்கி விட்டாரா தியாகராஜன் குமாரராஜா ? விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத், பாசில் என பலரை வைத்து பட்டை தீட்டிய ஒரு சினிமாவை எடுத்துள்ளாரா தியாகராஜன் குமாரராஜா?

வாருங்கள் விமர்சனத்தை பார்ப்போம்

கதைக்களம்

கதை இல்லாத காட்சிகளின் நகர்வே இந்த படத்தின் கதை களமாக அமைந்துள்ளது. படத்தில் மொத்தம் நான்கு காட்சி நகர்வுகள் உள்ளது.

ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் கணவன் மனைவிகள். இதில் ரம்யா கிருஷ்ணன் ஆபாசப் பட நடிகையாக வந்துள்ளார். ரம்யா கிருஷ்ணனின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஒரு நாள் தங்களது வீட்டில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனை பார்த்து ரம்யா கிருஷ்ணன் கடுப்பாக அவர்கள் மீது கோபப்படுகிறார். இதனால் கடுப்பான அந்த சிறுவர்கள் ரம்யா கிருஷ்ணனை கொள்ள முற்படுகின்றனர். மேலும் வீட்டில் இருந்த டீவியை உடைத்துவிட்டு வெளியே செல்கின்றனர். மீண்டும் எப்படியாவது டிவியை வீட்டில் வாங்கி வைத்து விட வேண்டும் என டிவியை தேடி அலையும் 5 சிறுவர்கள்.

சமந்தா மற்றும் பகத் பாசில் இருவரும் கணவன் மனைவிகள். இதில் சமந்தாவிற்கு முன்னாள் காதலர் ஒருவர் இருக்கிறார். பகத் பாஸில் வீட்டில் இல்லாத நேரம் தனது காதலனை வர வைத்து உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது காதலன் இறந்து போகிறான். இந்த கதை பகத் பாசிலுக்கு தெரிகிறது. பின்னர் மனைவி துரோகம் செய்துவிட்டார் என்ற கோபம் ஒருபுறம் இருந்தாலும் தன் மனைவியை கொலை பட்டத்தில் இருந்து தப்பிக்க வைக்க கடுமையாக போராடுகிறார் பஹத்.

விஜய் சேதுபதி காயத்ரி இருவரும் கணவன் மனைவிகள். இருவருக்கும் திருமணம் ஆன பின்னர் சில மாதங்களிலேயே வீட்டை விட்டு ஓடி விடுகிறார் விஜய் சேதுபதி. பின்னர் பல வருடங்கள் கழித்து மீண்டும் தன் மகனை பார்க்க திருநங்கையாக மாறி வருகிறார் . விஜய் சேதுபதி வருவதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் உற்றார் உறவினர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. இவர்களது கதைக்களம் ஒருபுறம்.

இந்த மூன்றும் சேர்ந்து போலீஸ்காரராக நடித்துள்ள பக்ஸ் இடம் ஓரிடத்தில் அகப்படுகின்றன இவையெல்லாம் முடிந்து இறுதியில் படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதுதான் கதை

படத்தின் ப்ளஸ்

விஜய் சேதுபதி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக அப்படியே பொருந்தி அசத்தியுள்ளார். பகத் பாசில் சில நிமிடங்கள் வந்தாலும் தனது நடிப்பு தரத்தை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். சமந்தா இதுவரை நடித்த படங்களிலேயே அவருக்கு இது ஒரு நல்ல பெயரை பெற்றுத் தரும். ஆபாசப் பட நடிகையாக நடித்துள்ளார் ரம்யாகிரிஷ்ணன் செம. தியாகராஜன் குமாரராஜாவின் டச் பல இடங்களில் ஜொலிக்கின்றது. படத்தின் இசையில் வாழ்ந்து இருக்கிறார் யுவன் சங்கர். ராஜா நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு துல்லியம்.

படத்தின் மைனஸ்

அனைத்து தரப்பு மக்களுக்கும் இது பிடிக்குமா என்றால் கேள்விக்குறிதான். சினிமா பிரியர்களுக்கு என்று உருவாக்கப்பட்ட ஒரு மிகச்சிறந்த படைப்பு. மொத்தத்தில் வாழ்க்கையில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும், ஒரு இடத்தில் நன்மை நடந்தால் மற்றொரு இடத்தில் தீமை நடந்தே தீரும். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும். என்று கூறியிருக்கிறது படம்.

சினிமாமேடை ரிவ்யு – 3.5/5