சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு உலக அரங்கில் கிடைத்த அங்கீகாரம்…

0
184

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி முதல் முறையாக திருநங்கை வேடத்தில் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது. இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கி இருந்தார். இதில் சமந்தா, பகத் பாசில் என பலர் நடித்திருந்தனர். ஆனால் இந்த படம் தமிழ் ரசிகர்களை அந்த அளவுக்கு கவரவில்லை. இருந்தாலும் அதில் விஜய் சேதுபதியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளது. அத்தனையும் அதே இயக்குனர் இயக்குகிறார்.

இந்நிலையில் கனடா நாட்டில் மோன்ட்ரல் நகரில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தேர்வாகி உள்ளது. இது இந்த படத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.