ஹாலிவுட் திகில் படங்களுக்கே சவால் விடும் சுந்தர்.சியின் இருட்டு! மிரட்டும் ட்ரெய்லர் வீடியோ இதோ!

0
222

சிறப்பான நகைச்சுவை இயக்குனராக தமிழ் சினிமாவில் சுந்தர்.சி களமிறங்கினார். பின்னர் ஹீரோ அவதாரம் எடுத்து அதிலும் நல்ல நடிகராக நிலைநிறுத்தினார். அதன் பின்னர் மீண்டும் கலகலப்பு படம் மூலம் மீண்டும் தனது வெற்றிகரமான இயக்குனர் பாதைக்கு திரும்பிவிட்டார் இயக்குனர் சுந்தர்.சி.

தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு கதாநாயகனாக சுந்தர்.சி ஒரு திகில் படத்தில் களமிறங்கியுள்ளார். இந்த படத்தை அஜித்தின்  முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா ஆகிய  படங்களை இயக்கிய V.Z.துரை இப்படத்தை இயக்கி உள்ளார்.

திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. அதில் அரபு பேசும் மனிதர்களை வேட்டையாடும் பேய் உலவும் இடத்திற்கு போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி வந்துள்ளார். அதன் பிறகான திகில் சம்பவங்களாக படம் இருக்கும் என ட்ரெய்லரில் தெரிகிறது. ரசிகர்களை திகிலூட்டும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது.