யோகி பாபுவின் அடுத்த நடிகை யார் தெரியுமா? தெரிந்தால் ஷாக் தான்!

0
117

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில்  ஒருவர் யோகி பாபு. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் யோகி பாபு. ஹீரோவாக தர்மபிரபு , கூர்க்கா போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் அப்படங்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் யோகி பாபுவும், கருணாகரனும் இணைந்து காமெடி கலந்த சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடிக்கிறார்களாம். “ட்ரிப்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் டென்னிஸ் இயக்குகிறார்.

இப்படத்தில் ஹீரோயினாக சுனைனா ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் இப்படம் குறித்த மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.