ஹிந்தியில் ரீமேக் ஆகும் சூரரை போற்று..?இயக்குனர் யாராக இருக்கும்..?

0
27

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த சூரரைப் போற்று படம் கடந்த 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சூரரைப் போற்று படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள், போலீஸ் அதிகாரிகள் என்று பலதரப்பினரும் சூர்யாவை பாராட்டியுள்ளனர்.

சூரரைப் போற்று படத்தில் நாங்கள் ஒரு காட்சியில் கூட சூர்யாவை பார்க்கவில்லை மாறாவை மட்டுமே பார்த்தோம். சூர்யா மாறாவாகவே வாழ்ந்திருக்கிறார் என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிடுகிறார்கள் என உறுதிப்படாத தகவல் வெளியாகி உள்ளது.ரீமேக்கில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

சுதா கொங்கராவே இந்தி ரீமேக்கையும் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் உறுதியாகவில்லை. தென்னிந்திய மொழி படங்களை இந்தியில் ரீமேக் செய்வது அதிகரித்து வருகிறது. அத்தகைய ரீமேக் படங்களில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

சூரரைப் போற்று படத்தை பார்த்துவிட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சூர்யாவை பாராட்டியிருந்தார். சூரரைப் போற்ரு படம் பார்த்து இம்பிரஸ் ஆன விஜய் தேவரகொண்டாவோ சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக ட்வீட் செய்தார்.