வந்தா ராஜாவாக தான் வருவேன் – உண்மையில் ராஜாவாக வந்துவிட்டாரா சிம்பு? VRV படத்தின் விமர்சனம்

0
609

VRV படத்தை சிம்பு, கேத்தரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன் யோகிபாபு, நாசர் என பலர் நடிக்க சுந்தர்சி இயக்கியுள்ளார்.

கதைக்களம்

எப்போதும் போல் கெத்தாக இருக்க வேண்டும் என நினைக்கும் சிம்புவிற்கு ஏற்ற கதையாக இது அமைந்துள்ளது. படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் சிம்பு ஒரு பெரிய இடத்தை சீமானாக இருக்கிறார். ராஜாவைப் போல் வாழ்ந்து வரும் சிம்புவிடம் அவரது தாத்தா நாசர் ஒரு கதையை சொல்கிறார். அதாவது நாசரின் மகள் ரம்யா கிருஷ்ணன் சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறி நடிகர் பிரபுவை திருமணம் செய்து கொள்கிறார்.

இதனால் தனது மகளை பல வருடங்களாக பார்க்க முடியாமல் ஏங்கி தவித்து வருகிறார் நாசர். இதன் காரணமாக 80 வயதில் இருக்கும் தனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற ரம்யா கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்று வேலைக்காரராக பணியில் சேர்கிறார் சிம்பு. பின்னர் தனது அத்தையான ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் முயற்சிகளின் தொகுப்பே இந்த படம்.

படத்தின் ப்ளஸ்

படத்தில் வழக்கம் போல சொல்லிக்கொள்ளும்படி அளவிற்கு ஏதும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். படத்திற்கு யோகிபாபு மட்டுமே பெரிய பாசிட்டிவாக அமைந்துள்ளார். வழக்கமான சுந்தர்.சி படங்களைப் போலவே படம் முழுவதும் கலர்ஃபுல்லாக தெரிகிறது. பஞ்ச் வசனங்கள் படத்தில் நன்றாக உள்ளது.

படத்தின் மைனஸ்

படத்தின் நிறைகளை விட குறைகள் மிக அதிகம். படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் இருக்கும் என நினைத்து தியேட்டருக்குள் சென்ற சிம்பு ரசிகர்களுக்கு ‘சம்பவம்’ தான் காத்திருந்தது. பல வருடங்களுக்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளிவந்த மின்சார கண்ணா படத்தின் ரீமேக் போலிருக்கிறது இந்த படம். எந்த சீனை பார்த்தாலும் இது எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே என்று ஞாபகம் உங்களுக்கு அடிக்கடி வரும். மொத்ததில் சிம்பு ராஜாவா வரவும் இல்லை, வாழவும் இல்லை,

Cinema Medai Star – 2.25-5