3 வருஷமா அனுபவிச்ச டார்ச்சர்:பொறுத்தது போதும் கொந்தளித்த ஜூலி

0
85

பிக் பாஸ் வீட்டில் ஜூலி நடந்து கொண்ட விதம், பொய் சொன்னதை பார்த்தவர்கள் அவரை போலி, போலி என்று கிண்டல் செய்தார்கள், இன்னும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தன்னை யார் திட்டினாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்தார் ஜூலி. ஒரு கட்டத்தில் நெகட்டிவிட்டியை தாங்க முடியாமல் ட்விட்டர் பக்கம் வருவதை குறைத்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் கவனம் செலுத்தினார்.

கடந்த சில நாட்களாகத் தான் ஜூலி மீண்டும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார். தான் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதை பார்த்து மோசமாக திட்டுகிறார்கள்.3 ஆண்டுகளாக ஜூலியை ட்விட்டரில் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜூலியின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,உங்கள் கேரக்டரை யாரும் அசிங்கப்படுத்தவில்லை. அசிங்கமான கேரக்டர் தான் உங்களுடையது. போலி ஜூலி தான். இப்படி எல்லாம் ட்வீட் போட்டால் பெரிய ஆளாகிவிடுவீர்களா என்று தெரிவித்துள்ளனர்.