‘கோலியிடம் வாய் கொடுத்து வம்பிழுக்க வேண்டாம்’ – ஆஸ்திரேலிய அணியை எச்சரித்த ஸ்டீவ் வாஹ்

    0
    34

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.

    இந்நிலையில், விராட் கோலியிடம் வாய் கொடுத்து வம்பிழுக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் எச்சரித்துள்ளார் .

    “கோலி மாதிரியான மாஸ்டர் கிளாஸ் பேட்ஸ்மேன்களிடம் ஸ்லெட்ஜ் செய்யாமல் அமைதியாக இருப்பதே நல்லது. தவறுதலாக வாய் கொடுத்து வார்த்தை போரில் ஈடுபட்டால் அது கோலியை மேலும் உத்வேகமாக விளையாட செய்யும். அதனால் கோலியை பக்குவமாக கையாள வேண்டும். ஸ்லெட்ஜிங் வியூகங்கள் அவரிடம் எடுபடாது” என ஆஸ்திரேலிய அணியை அவர் எச்சரித்துள்ளார்.

    கோலி கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அந்த வீரரர்கள் ஸ்லெட்ஜ் செய்த போதும் அபாரமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.