சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற 132 ரன்களை இலக்காக நிர்ணயத்தது பெங்களூரு அணி…

0
25

2020 ஐபிஎல் சீசனின் எலிமினேட்டரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்ததையடுத்து பெங்களூர் அணி பேட்டிங் செய்தது.

கோலியும், படிக்கல்லும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என பெங்களூர் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க 6 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டரின் பந்தில் சிக்கி கோலி விக்கெட்டை இழந்தார்.

ஹோல்டர் வீசிய இரண்டாவது ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்டார் கோலி. லெக் திசையில் ஷார்ட் லெந்த்தாக வீசப்பட்ட டெலிவரியை தட்டிவிட்டு ரன் சேர்க்க முயன்ற போது பந்து கிளவ்வில் பட்டு கீப்பர் கோஸ்வாமியின் கிளவுசுக்குள் தஞ்சமடைந்தது.

தொடர்ந்து இளம் வீரர் படிக்கல்லும் ஹோல்டர் வீசிய நான்காவது ஓவரில் வெளியேறினார். படிக்கல் 1 ரன் எடுத்த நிலையில் கார்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பவர்பிளே ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களை எடுத்தது பெங்களூர். ஆரோன் ஃபின்சும், ஏபிடியும் இன்னிங்க்ஸை மெதுவாக நகர்த்தினர்.இருப்பினும் நதீம் மற்றும் ரஷீத் கான் மூலம் மிடில் ஓவரில் பெங்களூருக்கு டிரபிள் கொடுத்தார் ஹைதராபாத் கேப்டன் வார்னர்.

நதீம் வீசிய 11வது ஓவரில் பெரிய சிக்ஸ் அடிக்க முயன்ற ஃபின்ச் அப்துல் சமாதிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் மொயீன் அலியும் ரஷீதின் அபாரமான டேரக்ட் ஹிட்டில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து களம் இறங்கிய தூபே, வாஷிங்க்டன் சுந்தர் மாதிரியான பேட்ஸ்மேன்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

360 டிகிரி பேட்ஸ்மேனான ஏபி டிவில்லியர்ஸ் மட்டும் பெங்களூர் அணிக்காக களத்தில் நின்று விளையாடினார். 43 பந்துகளில் 56 ரன்களை சேர்த்து தமிழக வீரர் நடராஜனின் யார்க்கரில் க்ளீன் போல்டானார்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது பெங்களூர் அணி .