வறுமையில் வாடிய பாக்யராஜ் பட நடிகருக்கு உதவிய நடிகர்கள்!!!

0
185

திரைப்படங்களில் நடித்து பின்னர் வாய்ப்புகளே இன்றி சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவிக்கும் நடிகைகள் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டதுண்டு. அந்தவைகையில் இணைந்துள்ளார் நந்தா கோபால். இவர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த பாக்யராஜின் சுந்தரகாண்டம் திரைப்படத்தில் பாக்கியராஜுக்கு நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுபோக ரஜினிகாந்துடன் அருணாசலம், ராசுக்குட்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது படவாய்ப்புகள் இன்றி உடல் நிலை மோசமான நிலையிலும் காணப்படுகிறார் இவர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இவர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட என்ன நடக்க கூட முடியவில்லை. ஒரு படம் இயக்கலாம் என அட்வான்ஸ் எல்லாம் குடுத்து வைத்திருதேன். ஆனால் அப்போது எனக்கு குளிர் காய்ச்சல் வந்து அந்த வாய்ப்பும் பறிபோனது. இப்போது சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்படுகிறேன். நடிகர் சங்கம் தான் எனக்கு உதவவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சவுந்தரராஜா மற்றும் ப்ளாக் பாண்டி இருவரும் இணைந்து தங்களால் முடிந்த மருத்துவ உதவிகளை செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் பெரும்பாலான நடிகர்களுக்கு தற்போது இதுதான் நிலை இதில் நம்மால் எல்லாருக்கும் உதவி செய்வது என்பது கடினம் தான். இருந்தாலும் நம்மால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு மருத்துவ மற்றும் உணவு உதவிகளை செய்யலாம் என கூறினார்.