Solar Eclipse 2019 : நெருப்பு வளைய சூரிய கிரகணம்-பல்வேறு பகுதிகளில் மக்கள் பார்த்து வருகின்றனர்…!வீடியோ

0
70

சந்திரன் பூமியையும், பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன் மற்றும் பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் என்ற நிகழ்வு ஏற்படுகின்றது.

குவியக் கூடிய நேரம், அதாவது சூரியன் ,சந்திரன் மற்றும் பூமி என மூன்றும் ஒரே நேர்கோட்டில் குவியக் கூடிய நிகழ்வாக நடக்கின்றது. இதனால் நாம் எதை செய்தாலும் அதற்கான பலன்கள் மிக அதிகமாக கிடைக்கும். இதன் காரணமாக தான் வீட்டில் இருந்தவாரே, மந்திரங்களை ஜெபிப்பதும் நல்லது என கூறுகின்றனர்.

வானில் நிகழும் அற்புதங்களில் ஒன்றான சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்துள்ளது. தமிழகத்தின் உள்ள பல்வேரு பகுதிகளில் இருந்து மக்கள் பிரத்யேக கருவி மூலம் பார்த்து வருகின்றனர். மேலும் இன்றைய சூரிய கிரகணம் அன்று பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனை விட, நிலவு, அளவில் குறைவாகவே காட்சியளிக்கும். சூரியனை மறைக்கத் தொடங்கும் நிலவு படிப்படியாக முன்னேறி இறுதியாக சூரியனின் மையப்புறத்தை அடையும்.

அப்போது இந்த அளவு மாறுபாட்டால், நிலவு, சூரியனை முழுமையாக மறைக்க முடியாமல் போகும். அந்த சமயம், சூரியன் நெருப்பு வளையத்தைப்போல் காட்சியளிக்கும். வானில் அரிதாக நிகழும் இந்த அற்புத காட்சி, வளைய சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.இந்நிலையில், இன்று காலை சுமார் 8 மணியளவில் நிலவு, சூரியனை மறைக்கத் தொடங்கியது. அந்த நேரத்தில் சூரியன் பிறைவடிவில் காட்சியளித்தது. தமிழகத்தின் பல இடங்களில் சூரிய கிரகணம் நடந்து வருகிறது.

சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் மக்கள் சூரிய கிரகணத்தை பார்க்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் மக்கள் கிரகணத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.அடுத்த மூன்றரை மணி நேரம் நீடிக்கும் இந்த கிரகணம், முற்பகல் 11 மணி 16 நிமிடம் தொடங்கி விலகத் தொடங்கும். பிறை வடிவிலான இந்த சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் தென்படும்.

கிரகண நிகழ்வின் போது, சரியாக காலை 9:31 மணிக்கு நிலவு, சூரியனுக்கு மையப்புறத்தில் வரும். அப்போது, வளைய சூரிய கிரகணம் என்ற வானியல் அற்புதம் நிகழும். 2 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் இந்த கண்கொள்ளா காட்சியை, தமிழகத்தில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே தென்படும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.