அடிமுறை’க்காக சினேகா அர்ப்பணிப்பு செய்த வைரல் வீடியோ…!

0
111
AQctress Sneha in Pattas Movie HD Images

தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகிய ‘பட்டாஸ் திரைப்படம் பொங்கல் தினத்தன்று நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படத்தை தனுஷ் ரசிகர்கள் பெரும்பாலானோர் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் தந்தை தனுஷின் கதாபாத்திரத்தில் மூலம் அடிமுறை கலை குறித்த விழிப்புணர்வு தற்போது தமிழகம் முழுவதும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,தனுஷை அடுத்து இந்த படத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது சினேகா நடித்த கேரக்டர் தான் . இந்த படத்தில் தனுஷுக்கு இணையாக அடிமுறை கலையை சினேகா வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் மேற்கொண்ட பயிற்சிகள் பல என்பது படக்குழுவினருக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில் தற்போது அடிமுறை கலையை சினேகா பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பயிற்சியாளர் சொல்வது போலவே அடிமுறை பயிற்சியை சினேகா செய்யும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன.

இந்த வீடியோவை பார்க்கும் போது அவர் எந்த அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த படத்தில் ஈடுபாட்டுடன் நடித்துள்ளார் என்பது புரியவரும்.