பிரம்மாண்ட படத்தை முதல் முறையாக தயாரிக்கும் சிவகார்த்திகேயன்!!! விவரம் உள்ளே..

0
116

சிவகார்த்திகேயன் தொகுப்பளராக இருந்து நடிக்கறமாக மாறியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆரபத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர் நீச்சல் என வரிசையாக பல படங்கள் ஹிட் கொடுத்து மக்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். ஆனால் சமீப காலமாக அவர் நடித்து வரும் படங்கள் தோல்வியையே தழுவி வருகின்றன. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இவர் மாறிவிட்டார். தனது சொந்த நிறுவனமான SK ப்ரோடக்ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார் இவர்.

கனா , நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்ததை தொடர்ந்து வாழ் என்ற படத்தையும் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது அவர் நடித்து வரும் மித்திரன் இயக்கம் திரைப்படத்தையும் தானே தயாரிப்பதாக அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். தனது படத்தை அவரே தயாரிப்பது இதுவே முதல்முறை.