சிவகார்த்திகேயன் ‘நம்ம வீட்டு பிள்ளை’ ரிலீஸ் தேதி எப்பொழுது தெரியுமா

0
258

நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் . சிவகார்த்திகேயனின் பதினாறாவது படமான இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.படத்தில் நகைச்சுவை நடிகர்களாக யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.