புலி பதுங்கி இருப்பது பாய்வதற்காக மட்டும் தான்…!நடிகர் சிவக்குமார்

0
45

சூர்யா அமைதியாக இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்று அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார் தெரிவித்துள்ளார்.சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் வெய்யோன் சில்லி என்ற பாடல் பறக்கும் விமானத்தில் ஆகாயத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சூர்யாவின் தந்தையுமான நடிகர் சிவக்குமார், “இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு நன்றி. சுதா கொங்கரா, மோகன் பாபு, சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்து உருவாக்கிய சூரரைப் போற்று திரைப்படம் இமாலய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

எங்களைப் பொறுத்தவரை சூர்யா ஒரு புதையல் தான். நான் நடிகனாக வந்த போது எனது குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர் வருவார் என்று சத்தியமாக கனவு காணவில்லை. கனவே காண முடியாத இடத்திலிருந்து ஒரு எக்ஸ்போர்ட் கார்மெண்ட்க்கு போக வேண்டிய சூர்யா, கடவுள் எங்களுக்கு கொடுத்த போனஸ். இப்படி ஒரு பையனை கொடுத்த கடவுளுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் சைலண்டாக இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். புலி பதுங்கிக் கொண்டிருக்கிறது. சூரரைப் போற்று படத்தில் பாயப் போகிறது.

மணிரத்னத்திடம் 7 ஆண்டுகளாக பணியாற்றியவர் சுதா கொங்கரா. அவர் இயக்கிய சூரரைப் போற்று படம் பார்த்தேன். அது ஒரு ஆவணப்படம் போல் இருந்தது. அவ்வளவு நேர்மையாக அந்தப் படத்தை இயக்கி இருந்தார். சூரரைப் போற்று திரைப்படம் சுதாவுக்கு வெற்றிப்படமாக அமையட்டும். இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் வரிசையில் ஜி.வி.பிரகாஷ் உச்சம் தொட அவரை வாழ்த்துகிறேன்” என்றார்.