அயலான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 3 வித்தியாசமான வேடங்களில் களமிறங்குகிறார்..!

0
53

அயலான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 3 வித்தியாசனமான வேடங்களில் நடித்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் இப்படத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமானார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம், பைனான்ஸ் பிரச்சனையால் பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது அந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெறுகிறது. அறிவியல் சார்ந்த இப்படத்துக்கு அயலான் என பெயரிடப்பட்டுள்ளது.படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்க, சிவகார்த்திகேயனின் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் 3 வித்தியாசமான வேடங்களில் நடித்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.