சின்னத்திரை நடிகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக் பாஸ் பிரபலம்!

0
124

என்.எஸ்.கே.ரம்யா 2008-ம் ஆண்டு வெளியான ‘பந்தயம்’ என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து இவர் 50க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்கள் பல பாடியுள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பாடல்களையும் பாடியுள்ளார். இவர் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட ரம்யா, கருது வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். இதனையடுத்து, பிரபல சின்னத்திரை நடிகரான சத்யாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 2 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.