கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த…ஜூன்1 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு..!எங்கு தெரியுமா?

0
257

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தற்காலிகமாக மே 4-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு ஜூன் 1- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்து சிங்கப்பூரில் தங்கி பணியாற்றும் தொழிலாளர்களிடம் தொற்று அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2-வது நாளாக அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்ததால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 29-ஆம் தேதி சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 102-ஆக இருந்த நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி அது 1000 -ஆக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது