ஒரே மாதத்தில் உருவாகும் சிம்பு படம்: ‘மாநாடு’ படப்பிடிப்புக்கு முன் முடிக்க திட்டம்!

0
29

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது படப்பிடிப்புக்கான அனுமதியை அரசு கொடுத்து விட்டாலும் ’மாநாடு’ படத்தின் பல காட்சிகள் கூட்டம் கூட்டமாக இருக்கும் காட்சிகளாக இருப்பதால் இப்போதைக்கு இந்த படம் தொடங்க வாய்ப்பு இல்லை என்றே தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக இயக்குனர் சுசீந்திரன் படத்தில் நடித்து முடிக்க சிம்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.முப்பதே நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க சுசீந்திரன் திட்டமிட்டுள்ளதாகவும் எனவே ’மாநாடு’ படத்திற்கு முன்பாகவே சிம்புவின் அடுத்த படம் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது. சிம்பு மற்றும் சுசீந்திரன் இணையும் இந்தப் படத்தில் அறிமுக நடிகை ஒருவர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிம்பு வெளிநாட்டில் உடற்பயிற்சி செய்து 20 கிலோ எடை யை குறைந்துள்ளதாகவும் அவருடைய புதிய தோற்றத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.