கப்பலில் சுற்றித்திரியும் சிம்பு – ஹன்சிகா !!!

0
140

ஹன்சிகா தற்போது நடித்துவரும் திரைப்படம் “மகா”. இது இவரின் 50வது திரைப்படம். இந்த படத்தினை ஜமீல் இயக்குகிறார். இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிப்பதற்காக சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் படக்குழுவுடன் சேர்ந்த சிம்பு நடிகை ஹன்சிகா உடன் கப்பலில் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இவர்களின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் படம் திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.