‘ரோஜா’ பட பாடலை பாடியபடி பனியில் நனையும் ஸ்ரேயா வீடியோ…!!

0
270

பனியில் ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்றைத் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா சரண். அதில், மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘புது வெள்ளை மழை’ பாடலை ஹம்மிங் செய்கிறார் ஸ்ரேயா. அத்துடன், மணிரத்னம் பெயரையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரேயா.

‘புது வெள்ளை மழை’ பாடலில், பனிப் பிரதேசத்தில் அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா இருவரும் இருப்பது போல் படமாக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சியை நினைவுபடுத்தி, தற்போது அதை ஹம்மிங் செய்துள்ளார் ஸ்ரேயா. இத்தனைக்கும் அந்தப் படம் ரிலீஸாகி 27 வருடங்கள் ஆகின்றன. அதன்பிறகு பனியில் எத்தனையோ பாடல்கள் படமாக்கப்பட்டாலும், காலத்தால் அழிக்க முடியாத பாடலாக ‘புது வெள்ளை மழை’ பாடல் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.