கல்யாணமாகியே 2 வருடம் ஆயாச்சு…!திருமண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை

0
326

நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராவார் .மேலும் அவர் ரஜினி நடிப்பில் வெளியான ஆம்பல் பாட்டில் அவரது நடனம் இன்று வரை,நமது கண் முன் நிற்கிறது.

பொதுவாகவே நடிகைகள் என்றாலே திருமணம் செய்த பிறகு நடிப்பதை குறைத்து கொள்வார்கள்.அதற்கு காரணம் அவர்கள் தங்களது மார்க்கெட்டை இழந்து விடக்கூடாது என்று சில நடிகைகள் நினைப்பார்கள்.அதில் தப்பு எதுவும் இல்லை.

இந்நிலையில்,நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் இருவீட்டார் முன்னிலையில் மட்டும் நடந்தது.

Image result for shreya marriage

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனக்கு திருமணம் ஆனதை ஸ்ரேயா ஒப்புக்கொண்டாலும் திருமண புகைப்படங்களை அவர் வெளியிடவில்லை. இந்த நிலையில் இன்றைய காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்ரேயா திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு பின் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் இந்திய முறைப்படி மணமக்கள் உடை அணிந்துள்ளனர். பாரம்பரிய முறையில் நடந்த இந்த திருமண புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Image result for shreya marriage

நடிகை ஸ்ரேயா தற்போது ’சண்டக்காரி’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களிலும் எஸ்எஸ் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்’ உள்ளிட்ட ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.