இந்த ரணகளத்துளையும் பாலாஜி செய்யும் வேலை.. மரண கலாய் கலாய்க்கும் ஹவுஸ் மேட்ஸ்

0
33

பிக் பாஸ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் இதுவரை ரேகா, வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சுஜித்ரா, அர்ச்சனா வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் பகல் நிலவு ஹீரோ முகமது அஜீம் மற்றும் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா அடுத்த வைல்டு கார்டு எண்ட்ரியாக வர வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகிறது.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் விவாத மேடை டாஸ்கானது நடைபெற்று வருகிறது. அதில் ஹவுஸ் மேட்ஸ் தங்கள் பிரச்சனை குறித்து புகார் அளித்து வாக்குவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும். அதன்படி சனம் – பாலாஜி, சனம் – சுரேஷ் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்ட நிலையில் நேற்று சோம் – பாலாஜி, சம்யுக்தா – ஆரி மற்றும் கேப்ரியல்லா – சுரேஷ் பிரச்சனைகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில், பாலாஜி – ஷிவானி ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில் இருவரும் எதோ பேசிக்கொண்டு இருக்க, சக ஹவுஸ் மேட்ஸ் பாட்டு போட்டி வைத்து விளையாடுகின்றனர். ஒரு டீம் முதலில் மன்மத ராசா பாடலை பாடுகிறார்கள். அதன் பின் லூசு பெண்ணே பாடலை பாடுகிறார்கள். இதில் பங்கேற்காமல் பாலாஜி மற்றும் ஷிவானி தனியாக பெட்டில் அமர்ந்து பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் பிக் பாஸ் வீட்டில் இந்த சீசன் காதல் ஜோடிகளாக ஷிவானி – பாலாஜி உலாவருவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.