அஸ்வின் பற்றி ஷிவாங்கியிடம் கேட்ட ரசிகர்…ஷிவாங்கி கொடுத்த ரிப்லை வீடியோ

0
17

விஜய் டிவி அதன் ரியாலிட்டி ஷோக்களுக்கு மிகவும் பிரபலமானது, மேலும் அந்த லிஸ்டில் தற்பொழுது முதலிடம் வகிப்பது நிச்சயமாக குக்கு வித் கோமாளி சீசன் 2 இப்போது நடந்து வருவதால், இந்த நிகழ்ச்சி முன்பு இருந்ததை விட மக்களின் விருப்பமாக மாறியுள்ளதுஎன்பது அனைவருக்கும் தெரிந்ததே.

சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும், மேலும் அவரது நகைச்சுவை உணர்வும் அனைவராலும் விரும்பப்படுகின்றன. அனைவருடனும் அவர் பேசுவதும்,பழகுவதும் நிகழ்ச்சியில் மிகவும் பாராட்டப்பட்டது, குறிப்பாக அஸ்வின் குமாருடன்.ஷிவாங்கியின் அண்ணன் தங்கை பாசம், அஸ்வின் மற்றும் ஷிவாங்கியின் ரொமான்ஸ் காட்சிகள் ஆகியவை ரசிக்கத்தக்க வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அஸ்வின் குறித்து ஷிவாங்கி கூறியிருப்பதாவது: அஸ்வின் ரொம்ப இனிமையானவர். அருமையான ஒரு மனிதர். நீங்கள் அவரை பற்றி என்ன நினைக்கின்றீர்களோ அவர் அதுக்கும் மேல இருப்பார். அவர் என்ன சமைத்தாலும் சூப்பராக இருக்கும். அதனால் அவர் எப்போது சமைத்து முடிப்பார் என்று நாங்கள் காத்திருந்து அவரிடமிருந்து புடுங்கி சாப்பிடுவோம். மேலும் அவர் மிகவும் ஒரு நகைச்சுவையான மனிதர். இதனை நீங்கள் போகப்போக பார்ப்பீர்கள் என்று கூறினார்.

https://www.instagram.com/princess_sivaangi/?utm_source=ig_embed