இந்த மருந்தை உட்கொண்டதால் கொரோனாவிலிருந்து குணமானேன்- நடிகர் விஷால் ட்வீட்..!

0
89

கொரோனா வைரஸின் பயத்தில் ஒட்டு மொத்த உலகமும் நிலை குலைந்து போயுள்ளது, பிரபலங்கள் பலரும் இந்த நோயினால் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை கொரோனா சோதனையில் நேர்மறையை பரிசோதித்தனர் என்பது அண்மையில் தெரியவந்தது. ஆனால் அவர்கள் ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்ட பிறகு தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்று செய்திகள் வெளியானது.

இதனை சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். அவர் தனது பதிவில் “ஆமாம், அது உண்மைதான், என் அப்பாவுக்கு சோதனை பாசிட்டிவ் ஆனது, அவருக்கு உதவிய எனக்கும் உயர் வெப்பநிலை, குளிர், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன மற்றும் எனது மேலாளருக்கும் அதேபோல் இருந்தது. நாங்கள் அனைவரும் ஆயுர்வேத மருத்துவத்தை எடுத்துக் கொண்டோம், ஒரு வாரத்தில் ஆபத்திலிருந்து வெளியேறினோம். நாங்கள் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறோம். இதைப் பகிர்வதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தற்போது பலர் நாங்கள் உட்கொண்ட மருந்துகளை குறித்து பலமுறை கேட்டுள்ளனர், ஆகையால் நாங்கள் பயன்படுத்திய மருந்துகளை பற்றி தற்போது கூறுகிறேன் என்று நேற்று வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவரின் ஆலோசனை பெற்றே இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.