ரத்தம் சொட்ட சொட்ட சென்னை அணிக்காக கடைசி வரை போராடிய வாட்சன்—

0
216

ஒரு வழியாக 2019 ஐபில் போட்டிகள் முடிவடைந்து விட்டன.எந்த சீசனிலும் காணாத ஒரு இறுதி போட்டி இந்த சீசனில் நம்மால் காணமுடிந்தது.பல சர்சைகள் மத்தியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி, மும்பை கோப்பையை தட்டிச் சென்றது. மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியிலும், சென்னை ரசிகர்கள் சோகத்திலும் இருக்கின்றனர்.

தோல்வியை தழுவினாலும் சென்னை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.தற்போது ஷேன் வாட்சன் தமிழகத்தின் புது ஹீரோவாக உருவெடுத்து உள்ளார்.ஆம் பைனலில் ஷேன் வாட்சன் தனது முட்டி காயத்துடன் விளையாடியது தற்போது தெரியவந்துள்ளது.அவர் முட்டியில் இருந்து ரத்தம் கசியும் புகைப்படத்தை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

விளையாடும்போது இது குறித்து ஷேன் வாட்சன் யாரிடமும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.போட்டி முடிந்த பின்னரே அவர் ரத்த காயம் அடைந்தார் என்பது தெரியவந்துள்ளது.தற்போது அந்த இடத்தில் அவருக்கு 8 தையல்கள் போட பட்டு உள்ளன.

ரத்தம் வந்த போதும் அதை யாரிடமும் கூறாமல் இறுதி வரை சென்னை அணிக்காக போராடிய ஷேன் வாட்சன் தற்போது தமிழகத்தின் புது ஹீரோவாக உருவெடுத்து உள்ளார்.