இந்த உலககோப்பையின் நாயகன் ஷாகிப் அல் ஹசன் தான்!!!

0
70

உலககோப்பை தொடர்நது கிட்டத்தட்ட பாதியளவு முடிந்துவிட்டது. இதுவரை நடந்துமுடிந்த போட்டிகளின் முடிவில் நியூஸிலாந்து அணி முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளன. அரையிறுதி போட்டிகளுக்கு செல்லும் அணிகள் கிட்டத்தட்ட உறுதியானாலும் வங்கதேசம், பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகளுக்கும் இன்னும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் தற்போதைய உலககோப்பை தொடரை பொறுத்தவரையில் கண்டிப்பாக தொடர்நாயகன் விருதினை பெறுவதற்கு தகுதியான ஒரே வீரர் சாகிப் அல் ஹாசன் தான்.

இந்த தொடரில் ஆறு போட்டிகளில் வெளயாடியுள்ள இவர் 2 சதம்மற்றும் 3 அரைசதங்களும் அடித்து 476 ரங்களுடன் முதல் இடத்தில உள்ளார். அதுமட்டுமல்லாமல் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான அரைசதம் விளாசியது மட்டுமல்லாமல் பந்துவீசி 5 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். இதன் மூலம் யுவராஜ் சிங்க்கு பின்னர் உலககோப்பை தொடரில் ஒரே போட்டியில் 50+ ரன் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அதுமட்டுமல்லாமல் உலககோப்பை தொடரில் இவர் 1000 ரன்களை கடந்துவிட்டார். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் வங்கதேச வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதுமட்டுமல்லாமல் எவராலும் முறியடிக்க முடியாத உலககோப்பை தொடரில் 1000+ ரன்கள் மற்றும் 30+ விக்கெட்டுகள் என்ற சாதனை படைத்தது அசத்தியுள்ளார் இவர்.

எனவே இந்த வருட உலககோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது பெறுவதற்கு முழுத்தகுதியும் கொண்டே ஒரே ஆள் இவரே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here