ராஜா ராணி சீரியல் நடிகையை பெண் கேட்டு வீட்டுக்கே சென்ற வாலிபர்–நடிகையின் வீட்டில் பரபரப்பு..

0
304

விஜய் டிவியில் ஓளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலில் நடித்து வருபவர் ரித்திகா. பல சீரியர்ல்களில் நடித்துவரும் இவர் சென்னை வடபழனியில் வசித்து வருகிறார்.நேற்று காலை ரித்திகா வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் , “நான் கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து வருகிறேன். எனக்கு ரித்திகாவை மிகவும் பிடிக்கும். சீரியலில் பார்த்து அவரை காதலிக்கிறேன். எனக்கு அவரை திருமணம் செய்து வையுங்கள்” என்று ரித்திகாவின் தந்தையிடம் கூறியுள்ளார்.

இதனால், பதற்றமடைந்த ரித்திகாவின் தந்தை சுப்பிரமணி, அந்த வாலிபரை எச்சரித்து அங்கிருந்து போகச்சொல்லியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஆனது.பின்னர், வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால்,போலீசார் அங்கு வந்து இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.பொறியாளரான பரத், கோவா செல்வதற்காக சென்னை வந்து விமானத்தை தவறவிட்டதால், ரித்திகாவின் முகவரியை தெரிந்து கொண்டு அவரின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.

உடனே பரத்தின் பெற்றோர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.மன அழுத்த நோயால் பரத் பாதிக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி இப்படி செய்துவிடுவதாக பரத்தின் பெற்றோர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.இதை அடுத்து போலீஸார் பரத்தை எச்சரித்து பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். மேலும், இது போல தனது மகன் செய்யமாட்டான் என்று போலீசார் எழுதி வாங்கியுள்ளனர்.