வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வருடன் ஆலோசனை நடத்திய செல்லூர் ராஜு…!

0
106

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழலில் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கும் அதிகபட்சம் 340 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் வைப்பது குறித்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், மத்தியத் தொகுப்பில் இருந்து வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து இருப்பு வைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.