சந்தோஷ் நாராயணனுடன் பலமான வெற்றி கூட்டணியில் மீண்டும் இணையும் சந்தானம்…!அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
156

இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘A1’. இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஆர்தர்.கே.வில்சன் இணைந்துள்ளார். ‘A1’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இன்று இந்தப் படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. இதில் சந்தானம், இயக்குநர் ஜான்சன்.கே, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் மதன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.