முன்னணி இயக்குநர்கள் ஒன்று சேர்ந்த சங்கர்-25…..

0
94

இயக்குநர் ஷங்கர் திரைத் துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவருக்கான பாராட்டு விழாவை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து நடத்தியுள்ளனர்.சங்கரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த பலரும் இன்றும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக உள்ளனர்.

அதில், குறிப்பிடக்கூடியவர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், அட்லி போன்றோர்.அவர்கள் அனைவரும் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரும் ஒன்று சேர்ந்து சங்கருக்கு அவரது அலுவலகத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை இயக்குநர் மிஷ்கின் ஒருங்கிணைத்துள்ளார்.மணிரத்தினம், லிங்குசாமி, சசி, அட்லீ, வசந்தபாலன், ரஞ்சித், பாலாஜி சக்தி வேல், பாண்டிராஜ் மற்றும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here