தமிழில் அறிமுகமாகும் நிக்கி கல்ராணியின் அக்கா!!! அதுவும் இந்த ஹீரோவுடன்…

0
172

தமிழில் கலகலப்பு 2, மரகத நாணயம் என பல படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. இவருக்கு சஞ்சனா கல்ராணி என்ற சகோதரி உண்டு. இவரும் நடிகை தான். தெலுங்கு திரையுலகில் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவருக்கு தமிழ் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

தற்போது தமிழில் முன்னணி நடிகராக விளங்கி வரும் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பாக்ஸர். இந்த படத்தின் ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகை சஞ்சனா கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.