கலீஜா பேசுறிங்க,உன் வளர்ப்பு சரி இல்ல – சம்யுக்தாவின் அவதூறு பேச்சுக்கு பதிலடி கொடுத்த சனம்

0
31

பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களுக்கு கால் சென்டர் டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு அணியினர் கால் சென்டரில் வேலை செய்பவர் போல உடை அணிந்து இருக்கின்றனர். மற்ற ஹவுஸ்மேட்ஸ் சிலர் கன்பெக்ஷன் ரூமில் இருந்து போன் மூலமாக என்ன கேள்வி வேண்டுமானால் கேட்கலாம்.தற்போது வந்திருக்கும் மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா இருவரும் சண்டை போட்டு கொண்டிருப்பது காட்டப்பட்டு உள்ளது.

சம்யுக்தவிற்கு கால் செய்து பேச துவங்கிய சனம் ஆரம்பத்தில் இருந்தே அவரை கோபப்படுத்தும் விதத்தில் பேசினார். ‘நான் தான் காலர், டென்ஷன் ஆகாதீங்க’ என்று தான் அவர் முதலில் கூறுகிறார்.

‘டென்சன் என்ன மேடம் ஆனேன். நீங்க பார்க்க அழகா இருந்தாலும் வாயை திறந்தால் கலீஜ் கலீஜாக தான் பேசுறீங்க’ என சம்யுக்தா பதிலடி கொடுக்கிறார்.’நம் மூளைல அந்த கலீஜ் இருந்தால் தான் வாயில் வரும். கேப்டன்சி டாஸ்கில் உங்களுக்கு சொந்த புத்தி இல்லை..’ என சனம் கேட்க, ‘நான் கேப்டன் ஆனதும் இவ்வளவு வெறுப்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை’ என சம்யுக்தா கூறினார். மேலும் வளர்ப்பு அப்படி என சனம் ஷெட்டியை திட்டி இருக்கிறார் சம்யுக்தா.