பிக்பாஸ் சீசன் 4 : பாலாஜி vs சனம் ஷெட்டி-இந்த முறை என்ன பிரச்சன்னை இருவருக்கும்..?

0
23

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 17 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதலில் இந்த சீசன் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் புதிய வரவாக பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார். அவர் வந்த முதல் நாளே போட்டியாளர்கள் அனைவருக்கும் அதிரடியாக பட்டத்தினை வழங்கினார்.கடந்த கால சீசன்களை போல் அல்லாமல் நட்பு, ஸ்நேகம் போன்றவை இந்த சீசனில் போட்டியாளர்களுக்குள் குறைவாக தென்படுவதாக பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் குறிப்பிடுகின்றனர். அதனால் என்னவோ ஹவுஸ்மேட்ஸ்களில் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே அனிதா மற்றும் சுரேஷில் ஆரம்பித்த இந்த மோதல் அடுத்தடுத்த நாட்களில் சனம், பாலாஜி என்று நீண்டு கொண்டே செல்கிறது.

ஹவுஸ்மேட்ஸ்களின் முன்பு சனமின் pageantஐ டுபாக்கூர் என்று கூறவே சனம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்த சண்டை உருவானது. அதைத் தொடர்ந்து இந்த மோதல் உலக நாயகன் கமல் முன்பு சென்று தீர்த்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் ஒரு மோதல் வெடித்துள்ளது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

பிக் பாஸ் வீட்டின் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் போட்டியாளர்கள் முன்பு தோன்றி அவர்களின் நிறை குறைகளைப் பற்றி பேசுவது வழக்கம். அதே போன்று இன்று ஹவுஸ்மேட்ஸ்களின் முகமூடிகள் ஒவ்வொன்றாக கிழிய= ஆரம்பித்துள்ளது என்று கூறி பிக் பாஸ் மேடையில் அசத்தலாக அறிமுகமானார் கமல். அதைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது திரையில் காட்டப்பட்டது.

இன்று பிக் பாஸ் வழங்கிய மத்தி மீனை நான் சமைக்க போகிறேன் என்று கூறிய நடிகை ரேகா அதனை மற்ற ஹவுஸ் மேட்ஸ்களிடம் தெரிவித்தார். அப்போது அங்கு இருந்த பாலாஜி நாம் இன்றே இதனை சமைத்து சாப்பிட்டு மீதம் உள்ளவற்றை நாளைக்கு உபயோகப்படுத்தலாம் என்று தன் கருத்தை கூறவே, அதற்கு சனம் இன்றே இது முடிவடைந்துவிடும் என்று கூற, ‘அனைத்திற்கும் உங்களது மூக்கை நுழைக்காதீர்கள்’ என்று பாலாஜி கடிந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து சுரேஷிடம் இது பற்றி முறையிட்ட சனம், பாலாஜி ஏன் என்னிடம் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது தெரியவில்லை என்று வருந்தினார். அப்போது அங்கு வந்த பாலாஜியிடம் இது பற்றி சுரேஷ் கேட்கவே, அதற்கு சனமிடம் உங்களிடம் எனக்கு பேச விருப்பமில்லை என்றும் நீங்கள் என்னை கார்னர் செய்வது போல் இருப்பதாக பாலாஜி கூறினார். மேலும் நீங்கள் என்னை வைத்து பிரபலமடைய பார்க்கிறீர்கள் என்று குற்றம் சாட்டவே அதற்கு சனம் கோபமாக இதற்கு மேலும் எனக்கு ஒரு செருப்படி தேவையில்லை என்று கூறி அங்கிருந்து வெளியேறினார்.சனம் மற்றும் பாலாஜி இடையே ஏற்பட்ட இந்த மோதல் கட்டாயம் உலக நாயகன் கமல் ஹாசன் முன்பு மீண்டும் செல்ல வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.