பேஷன் ஷோவில் கலக்கிய பி.வி.சிந்து,சாய்னா நெய்வால்

0
243

ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடைபெறும் லாக்மே ஃபேஷன் வீக் இந்த வருடமும் 2019-ம் ஆண்டிற்கான சம்மர் ரெசார்ட் ஷோ 5 நாட்கள் பிரமாண்டமாக மும்பையில் நடந்தது.நிறைவு நாளான நேற்று இந்திய இறகு பந்து வீராங்கனைகள் பி.வி. சிந்துவும், சாய்னா நேவாலும் கலந்துகொண்டனர்.

அதில் ஆடைகள் தொடங்கி, காலணிகள், அலங்காரப் பொருட்கள், அணிகலன்கள் என எல்லாமே அணிவகுக்கும். மும்பையே திருவிழா கோலத்தில் களைகட்டும்.அந்த வகையில் நேற்று பி. வி சிந்து இந்தியாவின் பிரபல பிராண்டான மிஸ்ஃபிட் பாண்டாவின் ’தி சீக்ரெட் கார்டன் ‘என்கிற தலைப்பில் வெளியிட்ட காலணிகளுக்கு ஷோஸ்டாப்பராக அணிவகுத்தார்.

அதில் பி.வி சிந்து வெள்ளை நிற ஆடையில் அழகாக மேடையை அலங்கரித்தார். அவர் அணிந்து வந்த காலணி ஸ்ணீக்கர்ஸில் பூட்ஸ் டைப் வகையில் டிசைன் செய்யப்பட்டிருந்தது. கன்டெம்பரரி ஸ்டைலில் அந்த ஷூ காண்போரை வெகுவாக ஈர்க்கச் செய்தது.