விஜய் தேவர்கொண்டா படத்திற்கு நோ சொன்ன சாய் பல்லவி!!! காரணம் என்ன தெரியுமா…

0
208

பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் தனது கால் தடத்தை பதித்தவர் சாய் பல்லவி. அந்த படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் அணைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் தனுஷ் உடன் மாரி 2, சூர்யா வுடன் NGK போன்ற திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் டியர் காம்ரேட் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு ராஷ்மிகா-விற்கு முன் சாய் பல்லவியை தான் படக்குழு நடிக்க முடிவு செய்தனராம். அதுகுறித்து அவரிடம் கேட்கும் போது படத்தில் முத்தக்காட்சி இருப்பதால் நான் நடிக்க மாட்டேன் என சாய் பல்லவி திட்டவட்டமாக கூறிவிட்டாராம். அதன் பின் தான் ராஷ்மிகா படத்திற்கு கதாநாயகியாக மாறினார்.