ரஜினி ,கமலிடம் தம்பியான விஜய்க்கு வழிவிட சொல்லும் எஸ்.ஏ.சந்திரசேகர் …!

0
98

உலக நாயகன் கமல் அவர்களின் 60 -வது பிறந்தநாள் சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது .இந்நிலையில் நடிகர் கமலை கௌரவிக்கும் விதமாக பிரபல தொலைக்காட்சி நேற்றைய தினம் ”உங்கள் நான் ” என்ற நிகழ்ச்சியை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் ரஜினி,விஜய்சேதுபதி,இளையராஜா உள்ளிட்ட முக்கிய பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் ,இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குனரும் ,நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது ,நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கோடான கோடி ரசிகர்கள் காத்திருப்பதாக கூறிய அவர், ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்தால் தமிழகத்துக்கு நல்லது. தமிழர்களுக்கு நல்லது என்றார்.

மேலும் பேசிய அவர், அரசியலில் பின்னால் இருந்து குத்துபவர்கள் தான் அதிகம். ஆனால் நாங்கள் பின்னால் இருந்து பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் இருவரும் ஆண்டது போதும் என நினைத்த பிறகு உங்கள் தம்பிகள் வந்தால் வழிவிட வேண்டும் என ரஜினி மற்றும் கமலுக்கு வேண்டுகோள் வைத்தார்.