ஹீரோ இன்ட்ரோ சீனுக்கு மட்டும் இத்தனை கோடியா!!! கோடிகளில் புரளும் பிரமாண்ட இயக்குனரின் அடுத்த படம்….

0
145

ராஜ மௌலி பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரை தன் வசமாக்கி கொண்டவர். அவர் இயக்கிய பாகுபலி திரைப்படம் உலக அளவில் மாபெரும் வசூல் சாதனையை செய்தது. அதன் இரண்டாம் பாகமும் அனைவரும் எதிர்ப்பார்த்தது போலவே நல்ல வசூல் சாதனை பெற்றது. இந்நிலையில் தற்போது அவர் இயக்கம் அடுத்த திரைப்படம் RRR .

சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படம் இது. இதில் கதாநாயகர்களாக ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR ஆகியோர் நடிக்கின்றனர். நாயகியாக நடிக்க ஆலியா பட் ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. மாபெரும் செலவில் தயாராகும் இந்த படத்தில் ராம் சரணின் இன்ட்ரோ காட்சிக்கு 15 கோடியும், ஜூனியர் NTR-ன் இன்ட்ரோ காட்சிக்காக 25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.