சுதந்திர தினம் இருக்கும்போது இந்தியாவின் குடியரசு தினம் எதற்கு குடியரசு அதற்கான காரணம் என்ன தெரியுமா?

0
266

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பல சாமான்ய மக்களுக்கு தெரிவதில்லை. என்பதே நிதர்சனமான உண்மை ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த நாள் சுதந்திரமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் குடியரசு தினம் என்றால் என்ன ஜனவரி 26-ஆம் தேதி குறிப்பாக அந்த நாளில் மட்டும் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன என்று தெரியுமா.?

ஆங்கிலேய ஆட்சியில் இருந்த இந்திய மக்கள் தங்களை தாங்களே ஆண்டு கொள்கிறோம் என்று 200 வருட போராட்டத்திற்கு பிறகு ஒன்றிணைந்த இந்தியாவாக 1947ம் ஆண்டு மீண்டு வந்தது. இந்த பல போராட்டங்களுக்குப் பின்னர் 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 பாகிஸ்தானின் லாகூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கூடியது. அந்த மாநாட்டில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய தலைவர்களால் பூரண சுயராஜ்யம் அதாவது முழுமையான சுதந்திரம் என்பதே நாட்டின் உடனடி லட்சியம் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை நோக்கி பயணம் செய்தனர். இதனை 1930ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் முதற்கட்டமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் நேரு.

1930 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வு வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக காணப்படுகிறது. இந்த நாளுக்கு பிறகு இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்று பின்னர் ஆகஸ்ட் 15 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தநர்.

பின்னர் உலக அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் இந்திய நாட்டிற்கான சட்டரீதியான அரசியலமைப்பு சட்டம் ஒருவரை வைத்து உருவாக்கப்பட்டதே இந்த வரைவு குழு.
வரைவு குழுவிற்கு டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுத தலைவராக நியமிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட இரண்டு வருடம் 11 மாதங்கள் கழித்து இந்த அரசியல் சாசனம் எழுதி முடிக்கப்பட்டது. சரியாக டிசம்பர் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இதன் அனைத்து பணிகளும் முடிவடைந்து. ஆனால் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நேரு உருவாக்கிய அந்த நாளில் இந்தியாவின் அரசியல் சாசனம் உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசியல் சாசனம் எழுதி முடிக்கப்பட்ட டிசம்பர் 26ம் தேதியில் இருந்து 30 நாட்கள் பொறுத்திருந்து 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளையே நாம் குடியரசு தினமாக தற்போது வரை கொண்டாடி வருகிறோம்.