‘ராட்சசன்’ படத்தை இத்தனை ஹீரோக்கள் நிராகரித்தார்களா..!நடிகர் விஷ்ணு அதிர்ச்சி தகவல்

0
104

பிரபல நடிகர் விஷ்ணு தனது ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பதில் தேர்ச்சி பெற்றவர். ஒவ்வொரு முறையும் அவர் புதிய கதை மற்றும் உள்ளடக்கத்துடன் வருகிறார். அந்த வகையில், ராம் குமார் இயக்கத்தில் நடித்த ‘ராட்சசன்’ விஷ்ணு விஷால் வாழ்க்கையில் மிக நினைவு கூறத்தக்க திரைப்படங்களில் ஒன்றாக, மிகப் பெரிய ஹிட்டாக மாறியது.

‘ராட்சசன்’ ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வென்றது, இது இதுவரை தமிழில் வெளியான சிறந்த திரில்லர் படங்களில் ஒன்றாகப் பார்கப்படுகிறது. இப்படம் வெளியாகி 2 வருடங்கள் நிறைவு செய்யவுள்ள நிலையில், இப்போது விஷ்ணு விஷால் ஒரு ஆச்சரியமான உண்மையை வெளிப்படுத்துகிறார். ‘ராட்சசன்’ கதையை அவருக்கு முன்னதாக 17 ஹீரோக்களும் 22 தயாரிப்பாளர்களும் மறுத்துள்ளனராம்.

விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது பல படங்களின் கதைகள் பல ஹீரோக்களால் நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளார். ‘ராட்சசன்’ செய்யும் வாய்ப்பையும் தானும் தவறவிட்டதாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு அந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்ததாக கூற்யுள்ளார்.