“ராட்சசன்” படம் படைத்த வேற லெவல் சாதனை…!வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
76

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படமான ராட்சசன் புதிய சாதனை படைத்துள்ளது.IMDB, உலக திரைப்படங்களின் தகவல் களஞ்சியமாக ரசிகர்களின் பெரும் மரியாதையை பெற்றிருக்கும் இணையதளம். அந்த இணையதளத்தில் இத்தனை வருடங்கள் வெளியான படங்களின் வரிசையில் தமிழ் திரைப்படங்களில் No 1 படமாகவும், இந்திய திரைப்படங்களில் No 3 திரைப்படமாகவும் இடம்பெற்றிருக்கிறது “ராட்சசன்” திரைப்படம்.

இது குறித்து ராட்சசன் பட தயாரிப்பாளர் G.டில்லிபாபு தெரிவித்துள்ளதாவது,இது எங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் மரியாதை ஆகும். இந்த வரவேற்பும், இத்தனை பெரிய வெற்றியும் இப்படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் உரித்தானது. 3 வருடங்களுக்கு முன்னதாக நிறைய கனவுகளுடன், சினிமாவின் மீது பெரும் காதலுடனும், நிறைய லட்சியத்துடனும் தயாரிப்பாளராக எனது பயணத்தை துவக்கினேன். அனைவராலும் மறக்க முடியாத படங்களை உருவாக்க நினைத்தேன்.
“ராட்சசன்” திரைப்படம் அந்த கனவை நனவாக்கியுள்ளது. தயாரிப்பாளராக பெரும் மரியாதையையும், பெயரையும் பெற்று தந்துள்ளது. நல்ல படங்களை தொடர்ந்து எடுக்க மிகுந்த ஊக்கம் தந்திருக்கிறது. இந்நேரத்தில் இயக்குநர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால், PV. சங்கர், ஷான் லோகேஷ் சரவணன், ஜிப்ரான் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.